மேற்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ வளா்ச்சிப்பணிகள்‌ குறித்து கோவை‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு..!

43-வது வார்டுக்குட்பட்ட புவனேஸ்வரி நகரில்‌ ரூ.25-இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ நகர்நல மைய கட்டடப்பணியினை பார்வையிட்டு, பணியினை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.


கோவை: கோவை‌ மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ வளா்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.73-க்குட்பட்ட தேராபந்த்‌ பகுதியில்‌ மாநகராட்சி தள்ளுவண்டி தூய்மைப்‌ பணியாளர்களுக்கு 100 எண்ணிக்கைகள்‌ கொண்ட மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்துச் சேகரிக்கும்‌ தள்ளுவண்டிகளுக்கான புதிய குப்பைத்‌ தொட்டிகள்‌, முகக்கவசங்கள்‌, கையுறைகள்‌ மற்றும்‌ உபகரணங்களை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, வழங்கிய பின்னர்,



தூய்மைப்‌ பணியாளர்கள்‌ முகக்கவசம்‌, கையுறைகள்‌ அணிந்து பணிகளில்‌ ஈடுபடுமாறும்‌, மாநகராட்சியில்‌ 100 வார்டுகளிலும்‌ பொதுமக்களிடம்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து வழங்க தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களிடமிருந்து குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து பெறவேண்டுமென மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, தூய்மைப்பணியாளா்களுக்கு அறிவுறுத்தினார்‌.



அதனைத்தொடர்ந்து, வார்டு எண்‌.72-க்குட்பட்ட வாழைக்காய்‌ மண்டி மற்றும்‌ இசைக்கல்லூரியில்‌ பயன்பாட்டில்‌ இல்லாத நுண்ணுயிர்‌ உரம்‌ (Micro Compost Centre) தயாரிக்கும்‌ மையங்களை பார்வையிட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தியதைத்தொடர்ந்து,



71-வது வார்டுக்குட்பட்ட கெளலிபிரவுன்‌ சாலையிலுள்ள உழவர்‌ சந்தையில்‌ காய்கறிக்கழிவுகள்‌, மக்கும்‌ குப்பைகள்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ (Micro Compost Centre‌) தயாரிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதை நேரில்‌ பார்வையிட்டு,



உழவர்‌ சந்தையில்‌ உள்ள வியாபாரிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்திய பின்னர்‌,



43-வது வார்டுக்குட்பட்ட புவனேஸ்வரி நகரில்‌ ரூ.25-இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ நகர்நல மைய கட்டடப்பணியினை பார்வையிட்டு, பணியினை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



மேலும்‌, வார்டு எண்‌.72-க்குட்பட்ட சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌, பிறப்பு இறப்பு பதிவேடு, புகார்‌ பதிவேடு மற்றும்‌ வருகை பதிவேடுகளை ஆய்வு செய்த பின்னர்‌,



வார்டு எண்‌.42-க்குட்பட்ட கோவில்‌ மேடு பகுதியில்‌ நீண்ட நாட்களாக தூர்வாராமல்‌ இருந்த மழைநீர்‌ வடிகால்‌ கால்வாயில்‌ உள்ள குப்பைகள்‌ மற்றும்‌ செடி, கொடிகளை அகற்றி தூர்வாரி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து,



43-வது வார்டுக்குட்பட்ட தடாகம்‌ சாலை, OSR இடத்தில்‌ போக்குவரத்து மற்றும்‌ பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ சரவணன்‌, நகரமைப்பு குழுத்தலைவர்‌ சோமு (௭) சந்தோஷ்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ அழகு ஜெயபாலன்‌, செல்வராஜ்‌, பிரவீன்ராஜ்‌, மல்லிகா, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, சுகாதார ஆய்வாளர்கள்‌ சலேத்‌, ஜெரால்டு சத்ய புனிதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...