திருப்பூர் பல்லடம் ஒன்றியம் 1-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் துவக்கம்..!

தேர்தலில் காங் - கட்சி சார்பில் ஈஸ்வர மகாலிங்கம், அ.ம.மு.க.சார்பில் குமரவேல், பா.ஜ.க சார்பில் ராஜ், சுயேச்சைகள் சதீஷ்குமார், சின்னசாமி, ஜெயப்பிரகாஷ் என ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.



திருப்பூர்: பல்லடம் ஒன்றியம் 1-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் தொடங்கியது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் 1-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் இன்று துவங்கியது. பல்லடம் ஒன்றியத்தில் 1-வது வார்டு உறுப்பினரான காங்கிரசை சேர்ந்த மகாலிங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இதையடுத்து 1-வது வார்டுக்கான இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. தேர்தலில் காங் - கட்சி சார்பில் ஈஸ்வர மகாலிங்கம், அ.ம.மு.க.சார்பில் குமரவேல், பா.ஜ.க சார்பில் ராஜ், சுயேச்சைகளாக சதீஷ்குமார், சின்னசாமி, ஜெயப்பிரகாஷ் என ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.

1-வது வார்டில் 3,720-ஆண் வாக்காளர்கள், 3,796-பெண் வாக்காளர்கள் மற்றும் இதர பாலினத்தினர் 2- என மொத்தம் 7,518-வாக்காளர்கள் உள்ளனர்.



தேவராயன்பாளையம் அரசு துவக்கப்பள்ளி, ஆர்.சி.துவக்கப்பள்ளி, கோம்பக்காட்டுபுதுார் அரசு நடுநிலைப்பள்ளி, பெத்தாம்பூச்சிபாளையம் அரசு துவக்கப்பள்ளி இச்சிப்பட்டி ஆகிய, நான்கு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள, 11-பூத்களில் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.



வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப் பட்ட பின்னர் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 



மொத்தமுள்ள 7,518-வாக்காளருக்கு, 7,600-ஓட்டு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.



ஓட்டுச்சாவடியில் 48-ஊழியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...