மின்னணு கழிவுகளுக்கு பணம்: திருப்பூரில் இரண்டாவது முறையாக சிறப்பு முகாம்..!

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள், நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயன்படுத்தப்படாத மின்னணு கழிவுகளை இன்று மாநகராட்சியில் ஒப்படைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கள் வீடு மற்றும் பள்ளிகளில் பயன்படுத்தப்படாத மின்னணு கழிவுகளை மாநகராட்சியில் ஒப்படைத்து பணம் பெற்றுக் கொண்டனர்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின்னணு கழிவுகளை ஆங்காங்கே விட்டுச் செல்லாமல் ஒருசேர சேகரிக்கும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி மற்றும் துப்புரவாளன் அமைப்பு மூலம் துவங்கப்பட்ட இத்திட்டம் இன்றைய தினம் இரண்டாவது முறையாக சிறப்பு முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் உள்ள பயன்படுத்தாத நிலையில், உள்ள பேட்டரி கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை இந்த முகாமில் கொடுத்து பணமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

குப்பைகளை ஆங்காங்கே விட்டுச் செல்லாமல் பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை தரம் பிரித்து அனுப்புவதன் மூலம் பொதுமக்கள் அதனைப் பணமாகவும் மாற்றிக் கொள்வதோடு, இயற்கைக்கு கேடு விளைவிக்காத வகையில் அமைத்துக் கொள்ளலாம் எனவும் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்திருந்தனர்.



இதனையடுத்து, இன்றைய தினம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள் நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ-மாணவிகள் பயன்படுத்தப்படாத மின்னணு கழிவுகளை இன்று மாநகராட்சியில் ஒப்படைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டனர்.



இந்நிகழ்வின் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி, துணை மேயர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...