கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

கடந்த 20-ஆண்டுகளாக குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளதால், புதிய கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், போதிய தண்ணீர் வரத்து உள்ளதால் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என மனு அளித்தார்.


திருப்பூர்: கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



கடந்த 20 ஆண்டுகளாக குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. தற்போது புதிய கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் போதிய தண்ணீர் வரத்து உள்ளதால் புதிய வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.

குன்னத்தூர் பேரூராட்சியில் பில் கலெக்டர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அலுவலகப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே காலி பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும்.

குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணிகளுக்காக ஒரு டிராக்டர் இழுவை வண்டி மட்டும் உள்ளது. இதனால் குன்னத்தூர் நகரப் பகுதியில் அதிக அளவில் குப்பைகள் தேங்கி வருகிறது.

எனவே, குப்பைகளை அகற்ற கூடுதலாக புதிய டிராக்டர் வாங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார்.



சட்டமன்ற உறுப்பினருடன் ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூர் பேரூராட்சி தலைவர், மற்றும் வார்டு உறுப்பினர்கள் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...