முதுமலை புலிகள் காப்பகத்தில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த காட்டு யானை.

யானையின் உடல் பாகங்களை டி.என்.ஏ. சோதனைக்காக சென்னைக்கு அனுப்பியுள்ளோம், அதன் முடிவுகள் வந்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


கோவை:நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சீகூா் சரகத்தில் உள்ள ஆனைகட்டி பகுதியில் வனத்துறையினா் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த போது, அழுகிய நிலையில் யானையின் சடலம் கிடந்துள்ளது.

இதையடுத்து, நேற்று வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் உடலை பார்வையிட்டனர். அப்போது, யானையின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனால், யானை இறந்து நீண்ட நாட்கள் இருக்கும் என தெரிகிறது.

தொடர்ந்து, கால்நடை மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இறந்தது பெண் யானை என்றும்22 வயது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையின் உடல் பாகங்களை டி.என்.ஏ. சோதனைக்காக சென்னைக்கு அனுப்பியுள்ளோம், அதன் முடிவுகள் வந்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...