கோவையில் அரசு பள்ளிகளை தனியார்‌ கல்லூரிகள்‌ தத்தெடுத்துள்ளது அரசின்‌ இயலாமையா? - பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கேள்வி..!

பல ஆயிரம்‌ கோடி நிதி, தனி அமைச்சகம்‌, அமைச்சர்‌, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள்‌ என்று இருந்தும்‌, குழந்தைகளுக்குத் தரமான கல்வி தர தனியார்‌ நிறுவனங்களை நாடி போகும்‌ சூழ்நிலையில்‌ அரசாங்கம்‌ உள்ளதா..? என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவை: சமீபத்தில்‌ 150 அரசு பள்ளிகளை 40 தனியார்‌ கல்லூரிகள்‌ தத்தெடுத்துள்ளது அரசின்‌ இயலாமையா? என பாமக கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

அனைவருக்கும்‌ தரமான இலவசமான கல்வி கொடுப்பது என்பது அரசாங்கத்தின்‌ கடமை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளதை சுட்டிக்காட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையில்‌ என்ன நடக்கிறது?

சமீபத்தில்‌ 150 அரசு பள்ளிகளை 40 தனியார்‌ கல்லூரிகள்‌ தத்தெடுத்துள்ளதாகச் செய்திகள்‌ வெளியாகின.இந்த ஒப்பந்தத்தின்படி, தனியார்‌ கல்லூரிகள்‌ அரசு பள்ளி மாணவர்களுக்குத் தொழில்‌ வழிகாட்டுதல்‌ மற்றும்‌ திறன்‌ பயிற்சி வழங்க இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அரசின்‌ இயலாமையா?

ஒவ்வொரு வருடமும், பல ஆயிரம்‌ கோடி நிதி, தனி அமைச்சகம்‌, அமைச்சர்‌, ஆயிரக் கணக்கான அரசு ஊழியர்கள்‌ என்று இருந்தும்‌, குழந்தைகளுக்குத் தரமான கல்வி தர தனியார்‌ நிறுவனங்களை நாடி போகும்‌ சூழ்நிலையில்‌ அரசாங்கம்‌ உள்ளதா..? என்பதை முதல்வர்‌ அவர்கள்‌ வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்‌.

கடந்த 25 ஆண்டுகளாகத் தனியார்‌ பள்ளிகள்‌ வளர, அரசு பள்ளிகளில்‌ தரம்‌ வேண்டுமென்றே குறைக்கப்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டின்‌ எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும்‌. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்‌.

எது அரசாங்கத்தின்‌ கடமை? மது விற்பதா? தரமான கல்வி கொடுப்பதா?

அரசியலமைப்பு (எண்பத்தி ஆறாவது திருத்தம்‌) சட்டம்‌ 2002, இந்திய அரசியலமைப்பில்‌ 21-A பிரிவைச்‌ சேர்த்து, 6 முதல்‌ 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும்‌, இலவச கட்டாயக்‌ கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்துகிறது.

இலவச கட்டாயக்‌ கல்விக்கான குழந்தைகளின்‌ உரிமைச்‌ சட்டம்‌ 2009, அரசியலமைப்பு உறுப்பு 21-Aஇன்‌ கீழ்‌ இது சட்டமாக இயற்றப்பட்டது.

அனைவருக்கும்‌ தரமான இலவசமான கல்வி கொடுப்பது என்பது அரசாங்கத்தின்‌ கடமை என்று இந்த சட்டம்‌ சொல்கிறது.

மதுவை விற்பது அரசாங்கத்தின்‌ கடமை என்று எந்த சட்டமும்‌ சொல்லவில்லை. இதை நாங்கள் நினைவுபடுத்த விரும்புகிறோம்‌.

கோவை பாமகவின்‌ கோரிக்கைகள்

1.தனியார்‌ நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்‌.

2.அரசு பள்ளிகளின்‌ உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்‌.

3.கோவை அரசு பள்ளிகளில்‌ காலியாக உள்ள ஆசிரியர்‌ பணியிடங்களுக்கு, ஏற்கனவே தகுதி தேர்வில்‌ வெற்றி பெற்று தங்களின்‌ தகுதியையும்‌ திறமையும்‌ நிரூபித்து இருக்கும்‌ ஆசிரியர்களை உடனடியாக நியமனம்‌ செய்ய வேண்டும்‌.

4.ஆசிரியர்களைத் தற்காலிக அடிப்படையில்‌ நியமிப்பதைத் தடை செய்ய வேண்டும்‌.

நிபுணர்‌ குழு அமைக்க வேண்டும்‌

அனைவருக்குமான முதல்வராக இருப்பேன்‌ என்று முதல்வர்‌ ஸ்டாலின்‌ சொல்லி இருக்கிறார்‌. அதை உறுதி செய்யும்‌ வகையில்‌, பாமகவின்‌ கோரிக்கையை ஏற்று அரசு பள்ளிகளை வளர்ச்சியடைய செய்ய அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய நிபுணர்‌ குழுவை அமைக்க வேண்டும்‌.

சிறந்த நிபுணர்களையும்‌, தொலைநோக்கு பார்வை கொண்ட சிந்தனைகளையும்‌ கொடுக்க பாமக காத்துக்‌ கொண்டிருக்கிறது.

இவ்வாறு கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி இத்திட்டம் குறித்து கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...