ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் (OSMA) தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு..!

சங்கத்தின் புதிய தலைவராக அருள்மொழி, செயலாளராக சந்திரசேகரன், பொருளாளர் - பிரான்சிஸ் சேவியர், மெண்டராக (Mentor) அனுஷ் ராமசாமி, முருகேசன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.



கோவை: ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கத்தின் (OSMA) செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. கூட்டத்தில், சங்கத்தின் புதிய தலைவராக அருள்மொழி மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



அதன்படி, சங்கத்தின் செயலாளராக சந்திரசேகரன், பொருளாளர் பிரான்சிஸ் சேவியர், மென்டாராக அனுஷ் ராமசாமி, முருகேசன் உதவி தலைவர் செந்தில்குமார் (வெள்ளகோவில்) இணைச் செயலாளர்கள் சுரேஷ்குமார் (பல்லடம்) மற்றும் பாரதி( திருப்பூர்) உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.



தீர்மானங்கள்.

தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் மில்கள் செயல்பட்டு வருகின்றன. ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கழிவுப் பஞ்சு கொண்டு நூல் உற்பத்தி செய்யும் பணி ஓபன் எண்ட் மில்களில் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ கிரே நூல், 15 லட்சம் கிலோ மறுசுழற்சி செய்யப்பட்ட கலர் நூலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஓபன் எண்ட் மில்களில் பயன்படுத்தப்படும் முக்கிய மூல பொருட்களான காட்டன் கழிவு பஞ்சு, பனியன் கட்டிங் வேஸ்ட் உள்ளிட்டவற்றை வங்கதேசம், வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய சங்கம் சார்பில் சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் தரம், உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவற்றை மேம்படுத்த உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் ஜவுளி உற்பத்தி மையங்களுக்கு நேரடியாக சென்று கண்காட்சி அமைத்து ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலை சந்தைப்படுத்துதல் சங்கத்தின் 25 ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மத்திய, மாநில அமைச்சர்களை அழைத்து விழா நடத்துவது, என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...