வார்டு எண்‌.29-மற்றும்‌ 30-க்குட்பட்ட பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!

தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகளில்‌ குப்பை தரம்‌ பிரிக்கும்‌ பணிகள்‌ குறித்தும்‌, முகக்கவசம்‌, கையுறைகள்‌ அணிந்து பணிகளில்‌ ஈடுபடுமாறும்‌, மாநகராட்சியில்‌ 100-வார்டுகளிலும்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து வழங்க பொதுமக்களிடம்‌ தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்த ஆணையாளர்‌ அறிவுறுத்தினார்‌.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.29-மற்றும்‌ 30-க்குட்பட்ட பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.29 மற்றும்‌ 30-க்குட்பட்ட ராயப்பா லே-அவுட்‌, சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ தூய்மைப் பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகளில்‌ குப்பை தரம்‌ பிரிக்கும்‌ பணிகள்‌ குறித்தும்‌, தூய்மைப்‌ பணியாளர்கள்‌ முகக்கவசம்‌, கையுறைகள்‌ அணிந்து பணிகளில்‌ ஈடுபடுமாறும்‌, மாநகராட்சியில்‌ 100 வார்டுகளிலும்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து வழங்க பொதுமக்களிடம்‌ தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, கணபதி, மாநகராட்சி தொடக்கப்பள்ளியில்‌ அருகிலுள்ள கணேஷ்‌ லே-அவுட்‌ முதல்‌ வீதியில்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்கள்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து வழங்கப்பட்டுவருவதை பாராட்டி தொடர்ந்து இப்பணிகளை செய்யமாறு கேட்டுக்கொண்ட பின்னர்‌, அப்பகுதியில்‌ தற்போது குடிநீர்‌ விநியோகம்‌ செய்யப்பட்டுவரும்‌ கால அளவை குறைத்தும்‌, குடிநீர்‌ விநியோகிக்கும்‌ அளவை கூடுதலாக அதிகரித்தும்‌ வழங்க குடிநீர்‌ விநியோக பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.

மேலும்‌, வார்டு எண்‌.29க்குட்பட்ட ஆவாரம்பாளையம்‌, அப்பா நாயுடு லே-அவுட்‌, இரயில்வே பாலம்‌ அருகிலுள்ள சாக்கடை கழிவுநீர்‌ கால்வாய்‌ அடைப்பை சரிசெய்து ஒருவார காலத்திற்குள்‌ தூர்வாரவும்‌, அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌. பின்னர்‌, கணபதி பகுதியில்‌ பொதுமக்களிடம்‌ குடிநீர்‌ விநியோகம்‌ செய்யும்‌ முறைகள்‌ குறித்து கேட்டறிந்து, கணபதி பகுதியில்‌ தெருநாய்களின்‌ தொந்தரவு அதிகமாக உள்ளதால்‌, அப்பகுதியில்‌ உள்ள தெருநாய்களுக்கு சட்டப்படி கருத்தடை செய்து மீண்டும்‌ அதே பகுதியில்‌ விடுவதற்கு சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வின்போது, வடக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ கே.ரங்கநாயகி, சரண்யா, உதவி பொறியாளர்கள்‌ நாசர்‌, மகேஷ்‌, மரகதம்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌, சுகாதார ஆய்வாளர்‌ அரவிந்த்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...