கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு..!

இரண்டு கடைகளில் கெட்டுப் போன நிலையில் இருந்த சுமார் 26-கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இந்தக் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் 2006-பிரிவு 55-கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை உக்கடம் லாரி பேட்டை மொத்த மீன் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.



கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்கடம் லாரி பேட்டை பகுதியில் உள்ள மொத்த மீன் மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீனில் ரசாயன வாசம் வருவதாக வடவள்ளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒருவர் உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி உக்கடம் லாரி பேட்டை மொத்த மீன் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து 15 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.



ஃபார்மாலின் ரசாயன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் ரசாயன பொருட்கள் சேர்க்க படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இரண்டு கடைகளில் கெட்டுப் போன நிலையில் இருந்த சுமார் 26 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இந்தக் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் 2006 பிரிவு 55 கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.



இதுபோன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...