கோவையில் சொத்துவரி கேட்பு தொகைகள் செலுத்தும் பணிகள் மீண்டும் துவக்கம் -மாநகராட்சி ஆணையாளா்‌ தகவல்..!

நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகளை அனைத்து மாநகராட்சி வரிவசூல்‌ மையங்களில்‌ மாலை 4.00 மணி வரையிலும்‌ மற்றும்‌ இணையதள வாயிலாகவும்‌ செலுத்தலாம் என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.


கோவை: கோவையில் சொத்துவரி கேட்பு தொகைகள் செலுத்தும் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளதாக மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்தெரிவித்துள்ளார்‌.

கோவை‌ மாநகராட்சி பகுதியிலுள்ள பொதுமக்கள்‌ இன்று (07.07.2022) முதல்‌ நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகளை அனைத்து மாநகராட்சி வரிவசூல்‌ மையங்களில்‌ மாலை 4.00 மணி வரையிலும்‌ மற்றும்‌ இணையதள வாயிலாகவும்‌ செலுத்தலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

கோவை‌ மாநகராட்சியில்‌ 01.04.2022 முதல்‌ சொத்துவரி பொதுச்சீராய்வு பணிகள்‌ நடைபெற்று வந்ததால்‌, பொதுமக்கள்‌ நடப்பு 2022-23ம்‌ நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகள்‌ செலுத்த இயலாத நிலையில்‌ இருந்தன.

தற்போது, மேற்படி பணிகள்‌ முடிவுற்ற நிலையில்‌, 2022-23ம்‌ நிதியாண்டின்‌ சொத்துவரிக்கான கேட்புகள்‌ கணினி மென்பொருளில்‌ எழுப்பப்பட்டுள்ளதால்‌, பொதுமக்கள்‌(07.07.2022) முதல்‌ நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகளை அனைத்து மாநகராட்சி வரிவசூல்‌ மையங்களில்‌ மாலை 4.00 மணி வரையிலும்‌ மற்றும்‌ இணையதள வாயிலாகவும்‌ செலுத்தலாம்‌ என்பதை மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...