கோவை வெள்ளலூரில் ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியரை அரிவாளால் வெட்டிய நபர்களால் பரபரப்பு….!

பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பள்ளி சிறுமிகளை கிண்டல் செய்து தகராறில் ஈடுபட்ட நபர்களை தட்டிக் கேட்க சென்ற சண்முகம் (62) என்பவரை இருவரும் சேர்ந்து இளநீர் வெட்டும் அருவாளால் தாக்கினர். போத்தனூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை வெள்ளலூர் அருகே ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியரை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்ற நபர்களை போத்தனூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை வெள்ளலூர் இரயில்வே காலனியை சேர்ந்தவர் சண்முகம் (62), இவர் இரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது பேரன் வெள்ளலூர் எல்.ஜி.நகர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், பள்ளிக்குச் சென்ற பேரனை அழைத்துச் செல்ல சண்முகம் இன்று மாலை எல்.ஜி.நகர் வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில், பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பள்ளி சிறுமிகளை கிண்டல் செய்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது குறித்து சண்முகம் தட்டிக் கேட்க சென்ற போது, இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அந்த நபர்கள், சண்முகத்தை அருகே இழுத்துச் சென்று இளநீர் கடையில் இருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டியுள்ளனர்.

சண்முகம் அவர்களை தடுத்ததால் இரண்டு கைகளிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. சம்பவத்தை பார்த்து, அங்கிருந்தவர்கள் சத்தம் போடவே, அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து, சண்முகம் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சண்முகத்தை அரிவாளால் வெட்டியது, போத்தனூர் பகுதியை சேர்ந்த சேட்டு அன்னியன் என்ற நபர் மற்றும் அவரது மகன் என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...