கோவை நெகமம் அருகே மின்கம்பம் மீது கார் மோதிய விபத்து - உயிர் தப்பிய தந்தை, மகன்….!

நாய் மீது மோதாமல் தவிர்க்க, மயில்சாமி காரை திருப்பியுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மின்கம்பம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், மின்கம்பம் சேதமடைந்தது. காரில் பயணித்த தந்தை மற்றும் மகன் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் மயில்சாமி(65). இவர் தனது மகனுடன் நெகமம் அருகே கக்கடவில் உள்ள தனது தோட்டத்துக்கு காரில் சென்றுள்ளார்.

பின்னர் அங்கு பணிகளை முடித்துவிட்டு, காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். காரை மயில்சாமி ஓட்டி வந்த நிலையில், கக்கடவில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக நெகமம் அருகே கோவில்பாளையம் ரோட்டில் வந்து கொண்டு இருந்தபோது, காணியாலாம்பாளையம் பிரிவு அருகே திடீரென நாய் குறுக்கே ஓடி வந்துள்ளது.

நாய் மீது மோதாமல் தவிர்க்க, மயில்சாமி காரை திருப்பியுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மின்கம்பம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், மின்கம்பம் இரண்டு துண்டாக முறிந்தது.

விபத்தில், காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த தந்தை, மகன் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து, மின்வார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து, கார் விபத்து பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, மின்கம்பம் மாற்றப்பட்டது. இந்த விபத்து குறித்து நெகமம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...