கோவை கள்ளிப்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3-ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு வழங்க படவில்லை - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..!

குடிநீருக்காக மாதந்தோறும் 3-ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து லாரி தண்ணீர் வாங்கி உபயோகிப்பதாகவும், கடந்த 3-ஆண்டுகளாக குடிநீர் கிடைப்பதில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை கள்ளிப்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3-ஆண்டுகளாக குடிநீர் கிடைப்பதில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பாளையம் பஞ்சாயத்து ராயல் என்கிளேவ்-ல் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில், தங்கள் குடியிருப்பு அமைக்கப்பட்டு 3-ஆண்டுகளுக்கு மேலாகியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிநீர் வேண்டி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மூன்று ஆண்டுகளாகியும் எங்களுக்குக் குடிநீர் இணைப்பு வழங்க படவில்லை என்றும் இதுகுறித்து பலமுறை பஞ்சாயத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

குடிநீருக்காக மாதந்தோறும் 3-ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து லாரி தண்ணீர் வாங்கி உபயோகிப்பதாகவும் தெரிவித்தனர். எனவே உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...