வார்டு எண் 32, 37க்கு உட்பட்ட பகுதியில் ரூ.528.35 லட்சம் மதிப்பில் தார் சாலைகள் புதுப்பித்தல் பணி - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!

கோவையில் வார்டு எண்‌.32 மற்றும்‌ 37-க்குட்பட்ட தண்ணீர்‌ பந்தல்‌ சாலை - மகேஸ்வரி நகர் சந்திப்பு முதல் விளாங்குறிச்சி பாலம் வரையில் ரூ.528.35 லட்சம் மதிப்பில் தார் சாலைகள் புதுப்பித்தல் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் விரைவாக செய்து முடிக்க பொறியாளருக்கு உத்தரவிட்டார்.


கோவை: வார்டு எண் 32 மற்றும் 37 க்கு உட்பட்ட பகுதியில் ரூ.528.35 லட்சம் மதிப்பில் தார் சாலைகள் புதுப்பித்தல் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் விரைவாக செய்து முடிக்க பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

கோவை‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.32 மற்றும்‌ 37-க்குட்பட்ட தண்ணீர்‌ பந்தல்‌ சாலை - மகேஸ்வரி நகர்‌ சந்திப்பு முதல்‌ விளாங்குறிச்சி பாலம்‌ வரை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்‌ (TNSUDP) ரூ.528.35 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 2.96 கிலோ மீட்டார்‌ நீளத்திற்கு அமைக்கப்பட்டுவரும்‌ தார்‌ சாலை பணியை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, நேரில்‌ ஆய்வு செய்து பணிகளை விரைவாக செய்து முடிக்க பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



இதேபோல், மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.23-க்குட்பட்ட ஏர்போர்ட்‌, பூங்கா நகரில்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து வழங்க வேண்டுமென அறிவுரை வழங்கி கோயம்புத்தூர்‌ மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளிலும்‌ மியா வாக்கி திட்டத்தில்‌ மரக்கன்றுகள்‌ நடுவதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான இடங்களை உதவி ஆணையர்கள்‌ மற்றும்‌ பொறியாளர்கள்‌ தோ்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.



பின்னர்‌, வார்டு எண்‌.23-க்குட்பட்ட ஏர்போர்ட்‌, பூங்கா நகர்‌ பகுதியில்‌ கழிவு நீர் தேங்கும்‌ பகுதியை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, தேங்கி உள்ள கழிவுநீரை உடனடியாக அகற்றி நிரந்தர தீர்வாக, அப்பகுதியில்‌ புதிய கழிவுநீர்‌ சுத்திகரிப்பு நிலையம்‌ அமைத்திட திட்டமதிப்பீடு தயாரித்து விரைவாக பணியை மேற்கொள்ள பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.



அதனைத்‌ தொடர்ந்து, வீரியம்பாளையம்‌ இளங்கோ நகர்‌, கோல்டுவின்ஸ்‌ பகுதியில்‌ நெடுஞ்சாலைத்துறை சார்பில்‌ தற்போது அமைக்கப்பட்டுவரும்‌ மழைநீர்‌ வடிகால்‌ கட்டுமானப்பணியினை பார்வையிட்டு, ஆய்வுசெய்து, அப்பகுதியில்‌ 2.54 கி.மீ. தொலைவிற்கு உடனடியாக புதிய குடிநீர் குழாய்‌ அமைத்து, குடிநீர்‌ விநியோகம்‌ செய்ய மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டதைத்‌ தொடர்ந்து,



வார்டு எண்‌.8-க்குட்பட்ட காளப்பட்டி, பாலாஜி நகா்‌, நேரு நகர்‌, பகுதியிலுள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியிலிருந்து தற்போது குடிநீர்‌ விநியோகம்‌ செய்யப்பட்டுவரும்‌ கால அளவை குறைத்தும்‌, குடிநீர்‌ விநியோகிக்கும்‌ அளவை கூடுதலாக அதிகரித்து பொதுமக்களுக்கு விநியோகம்‌ செய்திட மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ குடிநீர்‌ விநியோக பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌, வார்டு எண்‌.32 மற்றும்‌ 37க்குட்பட்ட தண்ணீர்‌ பந்தல்‌ சாலை மகேஸ்வரி நகர்‌ சந்திப்பு முதல்‌ விளாங்குறிச்சி பாலம்‌ வரை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ்‌ (TNSUDP) ரூ.528.35 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 2.96 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுவரும்‌ தார்‌ சாலை பணியை தரமாகவும்‌, விரைவாக செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்‌. பின்னர்‌, 24X7 குடிநீர்‌ விநியோகம்‌ செய்யும்‌ திட்டத்தில்‌ குடிநீர்‌ குழாய்‌ அமைக்கும்‌ பணியை ஒருவார காலத்தில்‌ செய்து முடிக்க உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வின்போது, உதவி ஆணையர்‌ மாரிச்செல்வி, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தாராஜன்‌, உதவி நகரமைப்பு அலுவலர்‌ ஜெயலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள்‌ மணியன்‌, விஜயகுமார்‌, உதவி பொறியாளர்‌ குமார்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ முருகா, சுகாதார ஆய்வாளர்‌ குணசேகரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...