கோவை சுந்தராபுரம் குறிச்சி குளம் அருகே டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் படுகாயம்..!

சாலையில் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஜே.சி.பி இயந்திரம் மூலம் இரண்டு லாரிகளையும் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர்.



கோவை: கோவை சுந்தராபுரம் குறிச்சி குளம் அருகே டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி சாலையில் கவிழ்ந்ததால் கோவை - பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



கோவை சுந்தராபுரம் குறிச்சி குளம் அருகே இன்று காலை உக்கடம் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு டிப்பர் லாரியும், சுந்தராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியது.



அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சாலை விபத்தில் ஜில்லிக்கற்களுடன் வந்த டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில், லாரிகளில் பயணம் செய்த ஓட்டுனர்கள் மேகநாதன், செந்தில்குமார் ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர்.



ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். படுகாயங்களுடன் லாரியில் சிக்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி அங்கிருந்தவர்கள் மீட்டனர். பிறகு இருவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாலையில் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து,ஜே.சி.பி இயந்திரம்மூலம் இரண்டு லாரிகளையும்தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் அப்புறப்படுத்திபோக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...