கோவை உக்கடம் லாரி பேட்டை அருகில் உள்ள மீன் மார்க்கெட்டில் கடல் மீன் விலை உயர்வு-கேரள டேம் மீன்கள் விலை குறைவு..!

கேரளாவில் மீன்பிடி தடை காலத்தால் கடல் பெரு மீன்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இரண்டு வாரம் கழித்து மீன் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை: தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் கேரளாவில் மீன்பிடி தடை காலம் ஆரம்பித்திருக்கின்றன.

கோயம்புத்தூர் லாரி பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில்வஞ்சிரம் 900-ரூபாய்க்கு, விற்கப்படுகிறது. கடல் பெரு மீன்களின் விலை கணிசமாக உயர்ந்து இருக்கின்ற நிலையில், மத்தி நெத்திலி உள்ளிட்ட கடல் சிறு மீன்களின் விலை கணிசமாக குறைந்து இருக்கின்றன.

இதேபோன்று டேம் மீன்கள் கட்லா ரோகு விலை கிலோவுக்கு 50-முதல் 100-ரூபாய் குறைந்து விற்கப்படுகின்றன.

இதனால் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் பிடிபடும் பெரு மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாட்டில் முடிவடைந்த நிலையிலும் மீன்களின் விலை அதிகரித்திருக்கின்றன.

அசைவ பிரியர்களுக்கு வசதியாக டேம் மீன்களின் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. இந்த நிலை இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் எனவும், பின்னர் மீனின் விலை குறையும் எனவும் மீன் வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வஞ்சிரம் - 900

கட்லா - 120

ரோகு - 120

பெரிய நெத்திலி - 300

சின்ன நெத்திலி - 100

மத்தி - 200

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...