கோவை போத்தனூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு மாடுகள் ரயில் மோதி உயிரிழப்பு…!

டெல்லி - திருவனந்தபுரம் விரைவு ரயில் இரு மாடுகள் மீது மோதியதில், ஒரு மாடு ரயில்வே தண்டவாளத்தின் வெளியே தூக்கி வீசப்பட்டது, மற்றொரு மாடு ரயில் என்ஜினில் சிக்கி உயிரிழந்தது.



கோவை: கோவை மதுக்கரை சாலை ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு மாடுகள் மீது இரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இரு மாடுகளும் உயிரிழந்தது.

கோவை போத்தனூர் - பாலக்காடு ரயில்வே தண்டவாளம், மதுக்கரை மேம்பாலம் அருகே வழக்கமாக மாடுகள் மேய்ச்சலுக்கு விடப்படும், இந்நிலையில், மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வழக்கம் போல மாலை வீட்டிற்கு திரும்ப அங்கிருந்த ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, டெல்லி - திருவனந்தபுரம் விரைவு ரயில் இரு மாடுகள் மீது மோதியது.

இந்த விபத்தில், இரண்டு மாடுகளும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. ஒரு மாடு ரயில்வே தண்டவாளத்தின் வெளியே தூக்கி வீசப்பட்ட நிலையில், மற்றொரு மாடு ரயில் என்ஜினில் சிக்கி உயிரிழந்தது.

இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள் பொதுமக்கள் உதவியுடன் சிக்கியிருந்த மாட்டின் உடலை வெளியே எடுத்தனர். இதனால், ரயில் நீண்ட நேரம் விபத்து பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...