Update: கோவையில் தனியார் பள்ளியில் உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணியில் விபத்து - சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அஜய் என்பவர் சிகிச்சை பலனின்றி மாலை உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய ரமேஷ் என்பவர், தலை மற்றும் காலில் ஏற்பட்ட காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள நூர் செட் மெட்ரிக் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் கட்டும் பணியும் போது நடந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த அஜய் என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கிய மற்றொருவர், ரமேஷ் தலை மற்றும் காலில் ஏற்பட்ட காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



கோவை குனியமுத்தூர் புட்டுவிக்கி சாலையில் நூர்சேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு தேவையான பெரிய இரும்பு பில்லர்கள், இரும்பு கம்பிகளை கொண்டு கூரை அமைக்கும் பணியானது ஜேசிபி எந்திரம் மூலம் நடைபெற்று வந்தது.



இந்த சூழ்நிலையில் திடீரென மேற்கூரை பெரும் சத்தத்துடன் சரிந்து கீழே விழுந்தது. இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அஜய் என்பவர் சிகிச்சை பலனின்றி மாலை உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய ரமேஷ் என்பவர், தலை மற்றும் காலில் ஏற்பட்ட காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று வழக்கம் போல பள்ளி செயல்பட்டு வந்துள்ள நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்த சமயத்தில், அப்பகுதியில் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...