சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ்‌ ரூ.40.07 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ பணிகளை கோவை‌ மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு..!

ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ்‌ ரூ.40.07 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ பணிகளின்‌ ஒருபகுதியாக தாமஸ்‌ பார்க்‌ பகுதியில்‌ அமையவுள்ள தீவுத்திடல்‌, பூங்கா மற்றும்‌ பெண்கள்‌ கழிவறை கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு செய்தார்.


கோவை: மாநகராட்சி மத்திய மண்டலம்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ்‌ ரூ.40.07 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வாலாங்குளத்தில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம்‌ இணைந்து படகுக்குழாம்‌ (Boat House) பணிகள்‌ நடைபெற்றுவருகிறது. அதன்‌ சோதனை ஓட்டமாக மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



பின்னர், மாநகராட்சி மத்திய மண்டலம்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ்‌ ரூ.40.07 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்றுவரும்‌ பணிகளின்‌ ஒருபகுதியாக தாமஸ்‌ பார்க்‌ பகுதியில்‌ அமையவுள்ள தீவுத்திடல்‌, பூங்கா மற்றும்‌ பெண்கள்‌ கழிவறை கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனிடையே, மாநகராட்சி உக்கடம்‌ வாலாங்குளக்கரைகளில்‌ சீர்மிகுநகர திட்டத்தின்கீழ்‌ ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைப்பு பணிகள்‌ நடைபெற்றுவருவதன்‌ ஒருபகுதியாக அப்பகுதியில்‌ உணவுக்கூடங்கள்‌ அமைக்கும்‌ பணிகள்‌ மற்றும்‌ வாகனம்‌ நிறுத்துமிடங்கள்‌ கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



மேலும், மாநகராட்சி, மத்திய மண்டலத்தில்‌ சீர்மிகுநகரத்திட்டத்தின்‌ கீழ்‌ வார்டு எண்‌.83க்குட்பட்ட ஆடிஸ்‌ வீதியில்‌ ரூ.2.5 கோடி மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுவரும்‌ நூலகம்‌ மற்றும்‌ அறிவுசார்‌ மையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்நிகழ்வில், மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ) எஸ்‌.அரசு, உதவி செயற்பொறியாளர்‌ புவனேஸ்வரி, பொது மேலாளர்‌ (ஸ்மார்ட்‌ சிட்டி) பாஸ்கரன்‌, சுற்றுலா வளர்ச்சிக்கழக உதவி செயற்பொறியாளர்‌ குணசேகரன்‌, உதவி பொறியாளர்‌ கமலக்கண்ணன்‌ ஆகியோர்‌ உடன்‌ இருந்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...