கோவையில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை…!

கோவையில் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி அருகே உள்ள ஆறுமுக கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் பூபாலன் (27). கட்டிட தொழிலாளி இவரது மனைவி ஷாலினி (26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பூபாலன் தனது சொந்த ஊரான சூலூருக்கு சென்று தங்கி, அங்கிருந்து பணிக்குச் சென்றுள்ளார்.

மேலும், வாரம் ஒரு முறை தனது குழந்தைகளை பார்க்க ரத்தினபுரி வரும் பூபாலன், பார்த்து விட்டு பணம் கொடுத்துவிட்டு சென்று வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல நேற்று பூபாலன் வீட்டிற்கு வந்த போது, ஷாலினிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக அப்பகுதி அக்கம்பக்கத்தினர் கூறியதாக தெரிவித்து, ஷாலினியிடம், பூபாலன் சண்டை போட்டுள்ளார்.

இதில், ஷாலினி பூபாலனை தாக்கியுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் பூபாலனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என கூறி, இறங்கிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் மது போதையில், அதிகாலை 4-மணிக்கு வந்த பூபாலன் கத்தியால் ஷாலினியை குத்தியுள்ளார். இதில் அவர் கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் ஷானிலியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மனைவி இறந்து விட்டார் என்ற பயத்திலிருந்த பூபாலன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மனைவியை கத்தியால் குத்தி விட்டு தற்கொலை செய்து கொண்ட பூபாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...