கோவையில் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு - பொதுமக்கள் சாலை மறியல், மற்றும் முற்றுகை போராட்டம்..!

போலீசார் இந்த கடை திறக்கப்படாது என உறுதி அளித்ததால் கலைந்து செல்வதாகவும் மீண்டும் அங்கு கடை திறந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை அறிவொளி நகர் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அறிவொளி நகர் செல்லும் சாலை எம்ஜிஆர் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், இன்று அந்த கடை திறக்க உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு கூடிய சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் அங்கிருந்த சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கடை திறக்கப்படாது என உறுதி அளித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது பள்ளி, கல்லூரிகள் மற்றும் குடியிருப்புகள் இருக்கக்கூடிய இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தால் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனவும், ஏற்கனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் கடையை திறக்க வந்ததாக தெரிவித்தனர்.

தற்போது போலீசார் இந்த கடை திறக்கப்படாது என உறுதி அளித்ததால் தாங்கள் கலைந்து செல்வதாகவும் மீண்டும் அங்கு கடை திறந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...