கோவை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு சொந்தமான ஆய்வு மாளிகையில், மாநகராட்சியில் பணியாற்றும் பொறியாளர் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள் உட்பட பொறியாளர் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோவை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு சொந்தமான ஆய்வு மாளிகையில், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, அதிமுக கோவை மாவட்ட புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும், வடவள்ளி பகுதியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அவருக்கு சொந்தமான மொத்தம் 6 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது. வடவள்ளியில் உள்ள அவர் வீட்டில் சுமார் 8 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவரது மனைவி சர்மிளா, கோவை மாநகராட்சி 38வது வார்டு கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.