விவசாய மக்களை பாதிக்கின்ற கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் பணியை கைவிட வேண்டும்: சீமான் பேட்டி..!

விவசாய மக்களை பாதிக்கின்ற கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என காங்கேயத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.


திருப்பூர்: விவசாய மக்களை பாதிக்கின்ற கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.

பவானிசாகர் அணையிலிருந்து திருப்பூர் மாவட்டம் மங்கலப்பட்டி வரை 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு கீழ்பவானி வாய்க்காலானது கடந்த 1958 ம் ஆண்டு வெட்டப்பட்டது. இந்த வாய்க்கால் மூலமாக ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் நேரடியாக ஆண்டுதோறும் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும், மறைமுகமாக ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்களும், கசிவு நீர் திட்டங்கள் மூலமாகவும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

மேலும், இந்த கசிவு நீரை நம்பி ஊராட்சிகளில் குடிநீருக்காக ஏராளமான ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் செல்வதில்லை எனக்கூறி, வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.720 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஆட்சியில் அதிமுக நடவடிக்கை எடுத்தது.

இந்த திட்டத்திற்கு விவசாயிகள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தில் விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழல் மற்றும் கசிவுநீர் திட்டங்கள் பாதிப்பு ஏற்படும். எனவே இந்த திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக காங்கேயம் அருகே நத்தக்கடையூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு எதிரான இத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும், கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தை விவசாயிகள் வேண்டாம் என்கின்ற பொழுது திமுக அரசு இதனை உடனடியாக கைவிட வேண்டும் எனவும், கான்கிரீட் அமைக்கும் பொழுது நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு நுண்ணுயிரிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் எனவும் தெரிவித்தார்.

இத்திட்டம் குறித்து பாஜக கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது என்பது வேடிக்கையான வேதனை எனவும், ஒன்றியத்தை ஆட்சி செய்யும் மத்திய அரசு பாஜகவாக இருக்கும்போது இங்கு கருத்து கேட்பது என்பது வேதனை எனவும் தெரிவித்தார்.

உடனடியாக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனவும், கேட்டுக் கொண்டார். ஒரு வருட காலத்தில் திமுக அரசு எதையும் செய்யவில்லை என குற்றம் சாட்டும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மத்தியில் பாஜக 8-ஆண்டு காலத்தில் என்ன செய்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ள மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...