நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த ரூபாய் 2-லட்சம் மதிப்பிலான 10-அரசு லேப்டாப்பை திருடிய வழக்கில் 8-ஆண்டுகள் கழித்து 2-இளைஞர்களுக்கு 6-ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை பொள்ளாச்சி நகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த மடிக்கணினிகளை திருடிய வழக்கில் 2-இளைஞர்களுக்கு 6-ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக அரசின் இலவச மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அங்குள்ள 10 மடிக்கணினிகள் காணாமல் போனதாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கோபால்சாமி 2014-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில், மோதிராபுரம் பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் மற்றும் உடுமலை ரோடு மரப்பேட்டை வீதியைச் சேர்ந்த பால ரகுபதிராஜ் ஆகியோர் இரண்டு இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில், லேப்டாப்கள் திருடப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 மேஜிஸ்ட்ரேட் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான பத்து அரசு லேப்டாப்பை திருடிய வழக்கில் 8-ஆண்டுகள் கழித்து இருவருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.