அதிமுக கோவை மாவட்ட புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!

வடவள்ளியில் உள்ள அவரது இல்லம் உள்ளிட்ட 6 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவின் வெளியீட்டாளராக இருக்கும் இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: அதிமுக கோவை மாவட்ட புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் இருந்து வருகிறார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவின் வெளியீட்டாளராக இருக்கும் இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார்.

கடந்த ஆண்டு மற்றும் கடந்த மார்ச் மாதம் அதிகாரிகள் வேலுமணி, சந்திரசேகர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.



இந்நிலையில், இன்று காலை முதல் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக வடவள்ளியில் உள்ள அவரது இல்லம் உள்ளிட்ட 6 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



வடவள்ளியில் உள்ள அவர் வீட்டில் சுமார் 8 அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவரது மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38-வது வார்டு கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...