பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 4ம் தேதி "பாஸ்போர்ட் மேளா " சிறப்பு முகாம் துவக்கம்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் அலுவலகத்தின் சார்பாக வரும் பிப்ரவரி 4ம் மற்றும் 5ம் தேதிகளில் பாஸ்போர்ட் மேளா சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதில், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்கள் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து பயனடையலாம்.

இந்த முகாமானது பாஸ்போர்ட் சேவா கேந்தரா 25 ஏஜிடி பிசினஸ் பார்க்கில் (லோட்டஸ் கண் மருத்துவமனை அருகில்) நடைபெறவுள்ளது. 

இம்முகாமில், சாதாரண பாஸ்போர்ட் வழங்குவதற்கு மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். இதற்காக இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள், 4 மற்றும் 5ம் தேதிகளில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்தராவில் தகுந்த ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

இதற்கான அழைப்பு ஜனவரி 25ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், தட்கல் மற்றும் போலிஸ் க்ளியரன்ஸ் சான்றிதழ்கள் இந்த முகாமில் பெறப்பட மாட்டாது. அன்றைய தினத்தில் புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...