நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து தங்க செயின்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிய ஆசாமி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடையில் இருந்து நகை தூக்கிக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
கோவை: பொள்ளாச்சியில், நகைக்கடையில் இருந்து தங்க செயின்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிய ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள ஒரு தனியார் நகைக்கடையில் நகை வாங்குவது போல் வந்த நபர் ஒருவர், ஊழியரிடம் நகைகளை காண்பிக்குமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து வெவ்வேறு டிசைன்களில் நகைகளை எடுத்து அந்த நபருக்கு காண்பித்து வந்தனர்.
திடீரென அந்த நபர் மேஜையில் இருந்த நகைகளுடன் வெளியே தப்பி ஓடினார். இதையடுத்து கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை துரத்திச் சென்றபோது, அந்த நபர் தவறி கீழே விழுந்தார்.

பின்னர் நகை திருட்டில் ஈடுபட்ட ஆசாமியை பிடித்த பொதுமக்கள் அவரை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் இடுக்காடு பகுதியைச் சேர்ந்த அஜய்(43) என்பது தெரியவந்தது.
பின்னர் நகைக்கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடையில் இருந்து நகை தூக்கிக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.