ஐபிஎஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்ட ராஜகுரு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கஃபே வைத்து நடத்துவதற்கு உதவி செய்வதாக கூறி முகேஷ் குமார் என்பவரிடம் ரூ. 6 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
கோவை: சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் முகேஷ் குமார் புரோகித். இவர் சென்னை, கோவை ஆகிய பகுதிகளில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆந்திராவைச் சேர்ந்த ராஜகுரு (32) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.
தன்னை ஐபிஎஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்ட ராஜகுரு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கஃபே வைத்து நடத்துவதற்கு உதவி செய்வதாக முகேஷ் குமார் புரோகிதிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய முகேஷ் குமார், ஆட்சியர் அலுவலகத்தில் கபே திறக்க அனுமதி வாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதன் பேரில், சென்னையில் இருந்து வந்த முகேஷ் குமார், கோவைக்கு புறப்பட்டு வந்தார்.
கடந்த ஜீன் 12ம் தேதியன்று, நீலாம்பூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அரை எடுத்து தங்கி இருந்த ராஜ குருவை, முகேஷ் குமார் புரோகித் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தை ஆட்சியர் அலுவலகத்தில் கபே திறக்க அனுமதி வாங்குவதற்காக கொடுத்துள்ளார்.
இதையடுத்து, மீண்டும் 13 ம் தேதியன்று பந்தய சாலை பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து 1 லட்ச ரூபாய் பணத்தையும், ஒரு லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் நட்சத்திர ஓட்டலுக்கான வாடகை 50 ஆயிரம் மற்றும் கோவையில் இருந்து சென்னை செல்ல விமான கட்டணம் என மொத்தம் சேர்த்து ரூ.6 லட்ச ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.
அதன் பின்னர், முகேஷ் குமார் பலமுறை முயற்சித்தும் ராஜகுருவை
தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பின்னரே, ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து ராஜகுரு தன்னை ஏமாற்றி ரூபாய் 6 லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவாகி இருப்பது முகேஷ் குமார் புரோகித்க்கு தெரியவந்துள்ளது.
மோசடி குறித்து, முகேஷ் குமார் புரோகித் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ராஜகுருவை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.