ரூ 1.46-கோடி மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுவரும்‌ நகர்நல மைய கட்டப்பணிகளை மேயர்‌ மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ பார்வையிட்டு ஆய்வு..!

மாநகராட்சி கிழக்கு மற்றும்‌ வடக்கு மண்டலத்தில்‌ ரூ 1.46-கோடி மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ நகர்நல மைய கட்டப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மற்றும்‌ வடக்கு மண்டலத்தில்‌ ரூ 1.46 கோடி மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுவரும்‌ நகர்நல மைய கட்டப்பணிகளை மேயா்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப், ஆகியோர்‌ இன்று (05.07.2022) நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ பீளமேட்டில்‌ ரூ.99 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ தேசிய நகாப்புற நல்வாழ்வு மையம்‌ மற்றும்‌ ரூ.22 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டு வரும்‌ ஆய்வகம்‌ ஆகியவற்றை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்‌.



அதனைத்‌ தொடர்ந்து பீளமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்‌. அப்போது சிகிச்சைக்காக வந்த தாய்மார்களிடம்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்தும்‌, சிகிச்சை திருப்திகரமாக உள்ளதா, மருந்து மாத்திரைகள்‌ சரியான நேரத்தில்‌ தருகிறார்களா, மகப்பேறு நிதி உதவி கிடைக்கிறதா என்பது குறித்தும்‌ கேட்டறிந்தனர்‌. மேலும்‌, மருந்தகம்‌ சென்று தேவையான மருந்து மாத்திரைகள்‌ இருப்பு உள்ளதா என்பது குறித்து நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்‌.



அதன்‌ பின்னர், பீளமேட்டில்‌ ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுவரும்‌ நகர்நல மையத்தை ஆய்வு செய்து, கட்டுமானப்பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ கட்டி முடித்து விரைவில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென பொறியாளர்களிடம்‌ அறிவுறுத்தினார்‌.

மேலும்‌, பீளமேடு பகுதியில்‌ செயல்பட்டுவரும்‌ குப்பையை தரம்‌ பிரித்து அனுப்பும்‌ பகுதிக்கு சென்று பார்வையிட்டு மக்கும்‌ குப்பைகளை கொண்டு வரும்‌ வாகனங்களில்‌ உள்ள குப்பைகளை விரைவாக பெற்று மீண்டும்‌ சம்பந்தப்பட்ட பகுதிக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்திய பின்னர்‌, குப்பை தரம்‌ பிரிக்கும்‌ பகுதியை சுத்தமாக பராமரித்து பயன்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்‌.



அதனைத்‌ தொடர்ந்து சத்தி சாலையில்‌ உள்ள மாடு அறுவைமனையை பார்வையிட்ட பின்னர்‌ நல்லாம்பாளையம்‌ சக்தி நகா்‌ பகுதியில்‌ உள்ள ரயில்வே தரைப்பாலத்தை பார்வையிட்டு மழைக்காலங்களில்‌ தேங்கும்‌ மழைநீரை அதிக மோட்டார்‌ பொருத்தி மழைநீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்ள பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வின்போது, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, உதவி ஆணையர்கள்‌ சங்கர்‌, மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர், நகார்நல அலுவலர்‌ மரு.சதீஷ்குமார் மண்டல சுகாதார ஆய்வாளர்‌ இராதாகிருஷ்ணன்‌, மருத்துவர்கள்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...