Exclusive: தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி..!

தமிழகத்தில் காற்று சீசன் துவங்கியுள்ள நிலையில், நேற்று முன்தினம், அதாவது ஜூலை 3 ஆம் தேதி 10.4 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், நேற்று (ஜூலை 4) ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.



கோவை: தமிழகத்தில் காற்று சீசன் துவங்கியுள்ள நிலையில் நேற்று (ஜூலை 4) ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) உற்பத்திதுறை முக்கிய பங்கு வகிக்கின்றன.

தமிழகத்தில் 8,600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு மாதத்திற்கு முன்னரே, அதாவதுமார்ச் 15ல் காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் துவங்கியுள்ளது. காற்று சீசன் துவங்கியுள்ள காரணத்தால், தினமும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

அதன்படி, , நேற்று ( ஜூலை 4) ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (IWPA) தலைவர், கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:



காற்று சீசன் தமிழகத்தில் துவங்கியுள்ள காரணத்தால் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், அதாவது ஜூலை 3 ஆம் தேதி 10.4 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில்,

நேற்று (ஜூலை 4) ஒரே நாளில் 10.7 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

நடப்பு சீசனில் இன்று வரை, ஒரே நாளில் அதிக மின்சாரம் நேற்று தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி,

தமிழகத்தின் தினசரி மின் தேவையில் காற்றாலைகள் 30 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிக்க துவங்கியுள்ளன.

தற்போது, ஆடி மாதம் துவங்கவுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தையும் தமிழ்நாடு மின்வாரியம் பெற்று கொள்கிறது.இது மிகவும் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...