சிறுமியின் பெற்றோர்கள் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு, பாத்திரக்கடை உரிமையாளர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கடைக்கு வந்த 13-வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாத்திரக்கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் பாத்திரக்கடை நடத்தி வருபவர் கனகுமணி(58). இவர் கடைக்கு வந்த 13-வயது சிறுமி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை அடுத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கனகுமணி சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை
கைது செய்து சிறையில் அடைத்தனர்.