கோவை பொள்ளாச்சியில் திருநங்கைகளுக்கு சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் வழங்கல்..!

வயது முதிர்வு அடைந்த திருநங்கைகளுக்கு ஓய்வூதியம், நில உரிமை பட்டா, பட்டா வழங்கிய திருநங்கைகளுக்கு வீடு கட்டுவது போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்து மனுக்கள் வழங்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் திருநங்கைகளுக்கு சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான திருநங்கைகள் உள்ளனர். அவர்களது, அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டு அறிய அரசு சார்பில் இன்று பொள்ளாச்சி காவலர் திருமண மண்டபத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஏராளமான திருநங்கைகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வயது முதிர்வு அடைந்த திருநங்கைகளுக்கு ஓய்வூதியம், நில உரிமை பட்டா, பட்டா வழங்கிய திருநங்கைகளுக்கு வீடு கட்டுவது போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்து மனுக்கள் வழங்கப்பட்டது.

மேலும், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கு நன்றி தெரிவித்த திருநங்கைகள், தொடர்ந்து அரசு இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...