தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு கோவை TNAU-வில் பூச்சி அருங்காட்சியகத்தில் ஆய்வு..!

தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் படி கோவையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என அக்குழுவின் தலைவர் இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பேரவையின் முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவினர் ஆய்வு கூட்டம் அக்குழுவின் தலைவர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.



கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பேரவையின் முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழுவினர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.



பின்னர் அங்குள்ள பூச்சி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.



இந்த ஆய்வு அக்குழுவின் தலைவர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த இராமகிருஷ்ணன், தமிழக முதல்வர் வழிகாட்டுதலின் படி கோவையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்தார்.

மகளிர் மேம்பாட்டு திட்டம் முதல்வர் நேசிக்கின்ற திட்டம் எனவும், தமிழகத்தில் 3-லட்சத்து 95-ஆயிரம் குழுக்கள் உள்ளது எனவும் கூறினார். கடந்த 20-ஆண்டுகளில் 1-லட்சம் கோடி மக்களுக்கு சுய உதவி குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், கோவையை பொறுத்தவரை, 228-ஊராட்சி பகுதிகளில் 5654-மகளிர் சுய உதவி குழுவும் வட்டார பகுதிகளில் 6794-குழுவும் முறையாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதற்கு மாவட்ட ஆட்சியரை பாராட்டுவதாகவும் கூறினார். தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் 28-இணைப்பு கல்லூரிகள் செயல்படுவதாகவும், 35-முதுகலை பட்டம் 14-இளங்கலை பட்டம், 30-பி.எச்.டி பட்டம் உள்ளது எனவும், இங்கு தமிழ் வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனவும் இதனை செம்மொழிக்கு கிடைத்த அந்தஸ்தாக கருதுவதாக தெரிவித்தார்.

மேலும், இங்கு மாவட்ட வேளாண் அறிவியல் மையம் துவக்கப்பட்டு, அனைத்து விவசாயிகள் பெண்கள், இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், இங்கு 166-பண்ணை கருவிகள் விவசாயிகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், 1000-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இந்த இரண்டு ஆய்வுகளும் பயனுள்ள ஆய்வுகளாக அமைந்துள்ளதாக கூறினார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உட்பட அக்குழுவைச் சேர்ந்தவர்கள் வேளாண் பல்கலைக்கழக ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...