திமுக அரசை கண்டித்து அவிநாசியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்..!

அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூர்: திமுக அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவதாக கூறி திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்று வருகிறது.



இதில், சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட வேண்டும், லாக்கப் மரணத்தை தடுத்திட வேண்டும், மணல் கொள்ளையை தடுத்திட வேண்டும், தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.



மேலும், தேர்தலின் போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...