சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் கோவை பொள்ளாச்சி நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் - பொதுமக்கள் அவதி..!

சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் சாலைகள் குறுகலாக உள்ளது. இதனால், பள்ளி கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பேருந்துகளும் வாகன நெருக்கடியில் சிக்கி ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


கோவை: சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் கோவை பொள்ளாச்சி நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகரின் முக்கிய சாலைகள் ஆன பொள்ளாச்சி கோவை ரோடு, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலை நடுவே தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், குறிப்பாக கோவை ரோடு சந்திப்பு, பாலக்காடு ரோடு சந்திப்பு, பல்லடம் ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் வளைவு பாதைகள் (ரவுண்டானா) அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்திற்கு ஏதுவாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் சாலைகள் குறுகலாக உள்ளது.



இதனால், பள்ளி கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பேருந்துகளும் வாகன நெருக்கடியில் சிக்கி ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

முக்கிய சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ள போதிலும், சாலை ஓரங்களில் விதி மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், அத்து மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...