62-வது வார்டுக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம்‌ பகுதியில்‌ கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு..!

மக்கும்‌ குப்பை மக்கா குப்பைகளை தரம்‌ பிரித்து தூய்மை பணியாளா்களுக்கு வழங்குவதையும்‌, குடிநீர்‌ விநியோகம்‌ முறையாக உள்ளதா மற்றும்‌ தெருவிளக்குகள்‌ எரிகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ பொதுமக்களிடம்‌ கேட்டறிந்தார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.62க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம்‌ பகுதியில்‌ சுகாதாரம்‌ மற்றும்‌ தூய்மை பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ ஆய்வு செய்தார்.



கோயம்புத்தார்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.62-க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம்‌ நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர்‌ ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, காப்பிணி தாய்மார்கள்‌, தாய்‌ சேய்களுக்கு அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌ போடப்படும்‌ தடுப்பூசிகள்‌, மருந்து மாத்திரைகள்‌ இருப்பு மற்றும்‌ பதிவேடுகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, மருத்துவர்களிடம்‌ தெரிவித்ததாவது, மகப்பேறு தாய்மார்களுக்கு அளிக்கப்படும்‌ சிகிச்சையில்‌ சிறப்பு கவனம்‌ செலுத்தி சிகிச்சையளிக்க வேண்டும்‌. மகப்பேறு தாய்மார்களுக்கு தொடர்ந்து அளிக்கப்படும்‌ சிகிச்சைகளை கண்காணிக்க வேண்டும்‌.



உரிய பதிவேடுகளில்‌ பதிவு செய்து, பராமரிக்க வேண்டும்‌. சிகிச்சை பெற்ற மகப்பேறு தாயும்‌, சேயும்‌ நலமாக உள்ளார்களா, தொடர்‌ சிகிச்சை பெற்றுக்கொள்கிறார்களா, தமிழ்நாடு அரசு வழங்கும்‌ நிதியுதவி முறையாக சென்றுசேர்கிறதா என்பதை மருத்துவர்கள்‌ கண்காணிக்க வேண்டும்‌. நகர்நல மையங்களில்‌ மாநகராட்சியிலுள்ள பொதுமக்களுக்கு அளிக்கப்படும்‌ சிகிச்சையின்போது மருத்துவர்கள்‌ கனிவுடன்‌ பேசி தரமான சிகிச்சை வழங்க மருத்துவர்கள்‌ முன்வர வேண்டுமென கேட்டுக்கொண்டார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, நஞ்சுண்டாபுரம்‌, காமராஜ்‌ காலனியில்‌ மக்கும்‌ குப்பை மக்கா குப்பைகளை தரம்‌ பிரித்து தூய்மை பணியாளா்களுக்கு வழங்குவதையும்‌,



குடிநீர்‌ விநியோகம்‌ முறையாக உள்ளதா மற்றும்‌ தெருவிளக்குகள்‌ எரிகிறதா என்பது குறித்து பொதுமக்களிடம்‌ கேட்டறிந்த பின்னா்‌,



அப்பகுதியிலுள்ள பொதுகழிப்பிடம்‌ சுகாதாரமான முறையில்‌ பராமரிக்கப்படுகிறதா என்பதை நேரில்‌ ஆய்வு செய்து சுகாதார ஆய்வாளர்கள்‌ முறையாக பராமரித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்திய பின்னர்‌, விடுபட்ட இடங்களில்‌ பாதாள சாக்கடை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல்‌ பெற்று பாதாள சாக்கடை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க

பொறியாளா்களுக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌, நஞ்சுண்டாபுரம்‌, பகுதியில்‌ உள்ள மேல்நிலை நீர்தேக்கத்‌ தொட்டியில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்து ஆய்வு செய்து 1.8 கி.மீ தொலைவிற்கு புதிதாக 24 மணி நேர குடிநீர் திட்டத்தில்‌ குடிநீர் குழாய்‌ அமைத்து கூடுதலாக குடிநீரை கொண்டுவந்து இப்பகுதியிலுள்ள மக்களுக்கு வழங்க, ஒருவார காலத்திற்குள்‌ குழாய்‌ அமைக்கும்‌ பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்‌.



மேலும்‌, அப்பகுதியிலுள்ள இராஜவாய்க்காலில்‌ தேங்கியுள்ள குப்பைகள்‌, செடி, கொடிகளை தூர்வாரி சுத்தம்‌ செய்து மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள பொறியாளர்களுக்கு உத்தரவிட்டதைத்‌ தொடாந்து,



நஞ்சுண்டாபுரம்‌, காமராஜ்‌ காலனியில்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையர்‌ சங்கர்‌, நகர்நல அலுவலர்‌ மரு.சதீஷ்குமார்‌, மாமன்ற உறுப்பினர்‌ ரேவதி முரளி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ பாபு, உதவி செயற்பொறியாளா்கள்‌ இராமசாமி, புவனேஸ்வரி, உதவி பொறியாளார்கள்‌ கணேசன்‌, ஜெயின்ராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...