கோவை வடவள்ளியில் சிறு-குறு கடைகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் மர்ம நபர்கள்..!

கோவை வடவள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் மர்ம நபர்களை கண்டறிந்து பிடிக்க, போலீசார் ரோந்து பணிகளை தீவிரமாக்க வியாபாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை வடவள்ளியில் சிறு-குறு கடைகளுக்குள் மர்ம நபர்கள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.

கோவை வடவள்ளி வியாபாரிகள் சம்மேளனத்தினர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளனர். அதில், வடவள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளான சோமயம்பாளையம், கல்வீரம்பாளையம், கணுவாய், போன்ற பல்வேறு பகுதிகளில் சிறு குறு வியாபாரிகள் தங்களது தொழிலை நடத்தி வரும் நிலையில், இரவு நேரங்களில் உலா வரும் மர்ம நபர்கள், கடையை நோட்டமிட்டு, கடையின் பூட்டுகளை, உடைத்து உள்ளே சென்று அங்கு இருக்கும் பொருட்களையும் விலை உயர்ந்த செல்போன்களையும், பணத்தையும், எடுத்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி, அதிகாலை 3-மணியளவில் கணுவாய் பகுதியில், உள்ள ஒரு பேன்சி கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த செல்போனை திருடி சென்றுள்ளனர்.



இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு வடவள்ளி, வியாபாரிகள் சம்மேளனத்தினர் நேற்று வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில், அதிகமாக காவலர்களை ஈடுபடுத்தி சிறு குறு வியாபாரிகளின் கடையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...