வார்டு எண்: 90 அதிமுக கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு; காலதாமதமாக நடவடிக்கை எடுத்த உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்…!

கோவைப்புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் விளையாட சந்தா தொகை செலுத்தாதது குறித்து கேட்ட திமுக கவுன்சிலரை, அதிமுக கவுன்சிலர் ரமேஷ் உள்ளிட்ட சிலர் தாக்கிய சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை தாமதமாக கையாண்ட, குனியமுத்தூர் சிறப்பு உதவி காவல் ஆணையாளரை, காவல் ஆணையாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி 90 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் உட்பட 4 பேர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முறையாக புகாரை, விசாரிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட குனியமுத்தூர் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரேம்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவைப்புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பேட்மிட்டன் கிளப்பில் விளையாட சந்தா தொகை செலுத்தாதது, குறித்து கடந்த 3 ம் தேதி இரவு திமுகவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கேள்வி எழுப்பினார். அப்போது, கார்த்திகேயனை, 90 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அபுதாகீர், ஜான்சன், சத்ரக் ஆகியோர் சேர்ந்து தாக்கினர்.

இதில், காயமடைந்த கார்த்திகேயன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், அதிமுக கவுன்சிலர் ரமேஷ் உட்பட 4 பேர் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நள்ளிரவு தகவல் தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் 3 மணி நேரத்திற்கு மேல் காலதாமதமாக செயல்பட்ட குனியமுத்தூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...