கோவை பேரூரில் பாரம்பரிய நாற்று நடவு திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு....!

ஆண்டுதோறும் ஆனி மாதத்தில், தேவேந்திர குல வேளாளர் சமுகம் சார்பில் கோவை அடுத்த பேரூர் பகுதியில் ஆனித் திருமஞ்சனம் சித்திர மேழி பொன்னேர் நாற்று நடவு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.



கோவை: கோவையில் சித்திரமேழி பொன்னேர் நாற்று நடும் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நாற்றுகளை நடவு செய்து பட்டின பெருமானை வழிபட்டனர்.

தேவேந்திர குல வேளாளர் சமுகம் சார்பில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் கோவை அடுத்த பேரூர் பகுதியில் ஆனித் திருமஞ்சனம் சித்திரமேழி பொன்னேர் நாற்று நடவு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுக மக்கள் இந்த நாற்று நடும் நிகழ்வை விழாவாக கொண்டாடுவது வழக்கம்.



அதன்படி, மேலை சிதம்பரம் என அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் மற்றும் பச்சைநாயகி உழவன், உழத்தியாக உருக்கொண்டு, இறைவனே நாற்று நட்டு விவசாயம் செய்ததாக கருதப்படும் ஐதிகத்தின் அடிப்படையில், இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.



அந்த வகையில் இந்த ஆண்டு நாற்று நடும் திருவிழா இச்சமுகத்தின் நான்கு வம்ச பட்டக்காரர்கள் தலைமையில் நடைபெற்றது.



இதில், ஏர் மற்றும் ஏர்பூட்டிய மாடுகளை உழவு செய்து பட்டிப்பெருமான் முன்னிலையில் மேலதாலங்கள் முழங்க ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நாற்றுகளை நடவு செய்து வழிபட்டனர்.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...