'முதலீட்டாளர்களின்‌ முதல்‌ முகவரி தமிழ்நாடு': 12-திட்டங்கள்; ரூ.22,252 கோடி முதலீடு; 17,645-பேருக்கு வேலைவாய்ப்பு..!

சென்னையில்‌ நடைபெற்ற “முதலீட்டாளர்களின்‌ முதல்‌ முகவரி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள்‌ மாநாட்டில்‌ வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும்‌ வகையில்‌ 12 திட்டங்களின்‌ வணிக உற்பத்தியினை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்‌.


கோவை: சென்னையில்‌ நடைபெற்ற “முதலீட்டாளர்களின்‌ முதல்‌ முகவரி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள்‌ மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்‌.

சென்னையில்‌ நடைபெற்ற “முதலீட்டாளர்களின்‌ முதல்‌ முகவரி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள்‌ மாநாட்டில்‌ ரூ.22,252 கோடி முதலீட்டில்‌ 17,645 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும்‌ வகையில்‌ 21 திட்டங்களுக்கு அடிக்கல்‌ நாட்டியும்‌, ரூ.1,497 கோடி முதலீட்டில்‌ 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும்‌ வகையில்‌ 12 திட்டங்களின்‌ வணிக உற்பத்தியினையும்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்‌.



கோவை ரத்தினம்‌ கல்லூரில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌, மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌‌, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர்‌ கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ உதயகுமார்‌, அஸ்லாம்பாஷா, ரத்தினம்‌ கல்லூரி இயக்குநர்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

இதனிடையே, கோவை‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.100-க்குட்பட்ட ஈச்சனாரி பகுதியில்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ அரசு விழாவிற்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ள மைதானத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வில், மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷாமிளா, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர்‌ கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ உதயகுமார்‌, அஸ்லாம்பாஷா, மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடன்‌ இருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...