தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சிர்சா பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சுனிதா துக்கல் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி காமராஜா ஆகியோர் கோவை வந்துள்ளனர். இருவருக்கும் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் தலைவர் மனுநீதி சோழன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை: கோவை வந்த சிர்சா பாராளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கல் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி காமராஜா ஐ.பி.எஸ்., ஆகியோருக்கு அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக வரவேற்பு வழங்கப்பட்டது.
கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி உற்சவம் நாற்று நடவு விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மழை வளம், இயற்கை வளம் பெற்று மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டாடப்படும்.
இந்த விழாவில் கலந்து கொள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சிர்சா பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சுனிதா துக்கல் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி காமராஜா ஆகியோர் கோவை வந்துள்ளனர்.

கோவை வந்த இருவருக்கும் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் தலைவர் மனுநீதி சோழன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டியல் வெளியேற்றுதல் கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கலிடம் மனு வழங்கப்பட்டது.
மனுவை வாங்கிய அவர், இது குறித்து பாராளுமன்றத்தில் பேச உள்ளதாகவும், மேலும் பிரதமரை சந்தித்து தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து பேச உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளார்.