கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடைக்கு மக்கள் எதிர்ப்பு- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் புதிதாக வரும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 'டாஸ்மாக் கடை வேண்டாம்' என பதாகைகளை ஏந்தி கண்டனத்தை வெளிப்படுத்தினர்.


கோவை: மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் வரும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டாஸ்மாக் கடை வேண்டாம் என வலியுறுத்தியும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மனு அளிக்க வந்த அவர்கள் மதுக்கடை வேண்டாம் என்ற பதாகைகளை ஏந்தி கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், அப்பகுதியில் குடியிருப்புகள், பேருந்து நிலையம், மருத்துவமனை, வார சந்தைகள் ஆகியவை உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் அங்கு அமைந்தால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கும்.

பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்று வர மிகவும் சிரமமாக இருக்கும் எனவும், எனவே டாஸ்மாக் கடை தங்களுக்கு வேண்டாம் என வலியுறுத்தினர். மேலும், இந்த ஆட்சியில் டாஸ்மாக் கடையை வீடுகளுக்குள்ளேயே நிறுவுவார்கள் போல் உள்ளது எனவும் ஆத்திரம் அடைந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...