கோவை - பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி வேண்டாம் - முதல்வருக்கு பொதுமக்கள் கடிதம்..!

சாலை விரிவாக்க பணிகள் முடிந்த நிலையில் தற்போது ஏழூர் பிரிவு பகுதியில் டோல் அமைப்பதற்கு சாலையை அளக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், டோல் பிளாசா வந்தால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும், இதனை நிறுவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வருக்கு அப்பகுதி மக்கள் கடிதம் அனுப்ப உள்ளனர்.


கோவை: கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி வேண்டாம் என முதல்வருக்கு பொதுமக்கள் கடிதம் அனுப்ப உள்ளனர்.

2016-ம் ஆண்டு கோவை- பொள்ளாச்சி நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகளும், சுங்கச்சாவடி அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, சாலை விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் அதற்குச் சம்மதித்த நிலையில், சுங்கச்சாவடி அமைக்க கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சாலை விரிவாக்க பணிகள் முடிந்த நிலையில் தற்போது ஏழூர் பிரிவு பகுதியில் டோல் அமைப்பதற்கு சாலையை அளக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், டோல் பிளாசா வந்தால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும் கூறி டோல் பிளாசா நிறுவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வருக்கு அப்பகுதி மக்கள் கடிதம் அனுப்ப உள்ளனர்.



இந்த கடிதத்தின் நகலைக் கோவை மாவட்ட ஆட்சியரிடமும் வழங்குவதற்கு வந்திருந்தனர். டோல் பிரச்சனை குறித்து ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தெரியப்படுத்தி உள்ளதாகக் கூறிய அவர்கள் அங்கு டோல் பிளாசா அமைந்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவும் கூறினர்.

இந்த டோல் பிளாசா கோவை மாநகராட்சிக்கு 8-கி மீ தொலைவிலேயே அமைய உள்ளது. சட்ட விதிமுறைகளை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...