பொய் கர்ப்பத்தை மெய்யாக்க கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடிய தாக பெண் வாக்குமூலம்..!

கணவனை பிரிந்த நிலையில், வேறு நபருடன் பழக்கம் ஏற்பட்டு பொய் கர்ப்பத்தை மெய்யாக்க கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடிய தாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.


கோவை: பொய் கர்ப்பத்தை மெய்யாக்க கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடிய தாக பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் யூனஸ்- திவ்யபாரதி தம்பதியருக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை பிறந்தது. நேற்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபரால் அந்த குழந்தை திருடப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மதுவிலக்கு அமலாக்க துணை காவல் கண்காணிப்பாளர், செல்வராஜ் மற்றும் வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாத நிலையில், இச்சம்பவம் போலீசாருக்கு சவாலாக இருந்தது. மேலும், மருத்துவமனை வளாகத்தை சுற்றியுள்ள கேமராக்கள் மற்றும் பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்லும் வழியிலுள்ள 150 சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கோயம்புத்தூரில் உள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில், குழந்தைகளைக் கடத்தி சென்ற குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கேரளா விரைந்த காவல்துறையினர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கொடுவாயூர் பகுதியைச் சேர்ந்த 34-வயதான ஜெமினா மற்றும் அவருடன் இருந்த நபர் ஒருவரையும் பிடித்தனர். ஜெமினாவை விசாரணை செய்ததில், அவர் தனது கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்று தீர்மானித்தன் பேரில் ஜெமினா கர்ப்பமாக இருப்பது போல போலியாக நடித்து வந்துள்ளார். மேலும், தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக மணிகண்டனிடம் கூறியுள்ளார்.

மணிகண்டன் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கேட்டதை அடுத்து, பொள்ளாச்சியைச் சேர்ந்த யூனஸ் - திவ்யபாரதி தம்பதியினரின் குழந்தையைக் கடத்தி சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து குழந்தை பத்திரமாக மீட்டு போலீசார் குழந்தையை உரிய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வழக்கில் குறித்த விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...