திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!

இந்து முன்னணி குறித்து அவதூறாக செய்திகளை பரப்பிய சட்டமன்ற உறுப்பினரை கண்டிக்கும் வகையிலும், உடனடியாக உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, பள்ளிவாசலுக்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தியும், திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் 15-வேலம்பாளையம் மகாலட்சுமிநகர் பகுதியில்இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் குடியிருப்பதற்கான உரிமம் மட்டுமே பெற்றுவிட்டு மத வழிபாட்டுத் தலமாக மாற்றியதாக அப்பகுதி பொதுமக்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த வியாழக்கிழமை பள்ளிவாசலுக்கு அதிகாரிகள் சீல் வைக்க சென்றதையடுத்து திருப்பூர் மாநகரம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றது.

இதனை அடுத்து நீதிமன்றம் 3-நாள் அவகாசம் வழங்கியது. இந்நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் இந்து முன்னணியினர் தூண்டுதலின் பேரில் தான் வழக்கு தொடுக்கப்பட்டிருந்ததாகவும், பள்ளிவாசலுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டால் பதற்றமான சூழல் ஏற்படும் என கடிதம் அனுப்பி இருந்தார்.

அதில், இந்து முன்னணி குறித்து அவதூறாக குறிப்பிடப்பட்டிருந்ததாக இந்து முன்னணியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்து முன்னணி குறித்து அவதூறாக செய்திகளை பரப்பிய சட்டமன்ற உறுப்பினர் கண்டிக்கும் வகையிலும், உடனடியாக உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி பள்ளிவாசலுக்கு சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தியும், திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாநில செயலாளர் கிஷோர் குமார் தலைமையில், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் வீட்டை இன்று முற்றுகையிட போவதாக இந்து முன்னணியினர் அறிவித்திருந்த நிலையில் வீட்டிற்கு மாநகர காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...