கோவை-ஹிசார் இடையேயான ரயிலில் இரண்டடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் தற்காலிகமாக இணைப்பு..!

கோவை-ஹிசார் இடையேயான ரயிலில் இரண்டடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில், வரும், 6-ம் தேதி முதல், 27-ம் தேதி வரை இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை-ஹிசார் இடையேயான ரயிலில் இரண்டடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு பின் அனைத்து வழித்தடங்களிலும் இயங்கும் ரயில்களின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் அதிகரித்து வருகிறது.

இத்துடன், ரயில்களில் கூடுதல் பெட்டிகளையும் இணைத்து வருகிறது. இதன் மூலம் கூடுதல் பயணிகள் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து ஹிசார் செல்லும்(வ.எண்: 22476) ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என, பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து வரும், 9-ம் தேதி முதல், 30-ம் தேதி வரை இயக்கப்படும் இந்த ரயிலில் கூடுதலாக இரு இரண்டடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது. மறுமார்க்கமாக, ஹிசாரில் இருந்து கோவை செல்லும்(வ.எண்:22475) ரயிலிலும் கூடுதலாக இரு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

இந்த ரயில், வரும், 6-ம் தேதி முதல், 27-ம் தேதி வரை இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...