வால்பாறையில் ஊராட்சி துவக்கப் பள்ளியின் சத்துணவு கூடத்தின் சுவரை இடித்து சேதப்படுத்திய யானைக் கூட்டம்

நேற்று இரவு, வால்பாறை உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம் அருகே சுற்றித்திரிந்த 7 காட்டு யானைகள், பள்ளி சத்துணவு மையத்தின் சுவரை இடித்து சேதப்படுத்தியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் என்பது வழக்கமான ஒன்று தான் என்றாலும், கூட்டமாக வரும் யானைகள், வீடுகள், மளிகை கடைகள், பள்ளி சத்துணவு கூடங்கள் மற்றும் ரேசன் கடைகளை சேதப்படுத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு, வால்பாறை உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம் அருகே சுற்றித்திரிந்த 7 காட்டு யானைகள், பள்ளி சத்துணவு மையத்தின் சுவரை இடித்து சேதப்படுத்தியது.



பின்னர், அருகில் இருந்த ஒரு வீட்டின் தடுப்பு சுவரையும் இடித்துத் தள்ளியது.



யானைகளின் அட்டகாசம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டினர்.

சம்பவத்தை தொடர்ந்து, எஸ்டேட் பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை அடர் வனத்துக்குள் துரத்த வேண்டும் என்று பகுதிகள் மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...