வால்பாறையில் அரசு பேருந்து - லாரி நேருக்கு மோதி விபத்து; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

கவர்க்கல் பகுதி அருகே அதிகப்படியான பனிமூட்டம் மற்றும் மழையால், கோவை வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும், பொள்ளாச்சியில் இருந்து வால்பறைக்கு நிலக்கரி ஏற்றி வந்த லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில், அதிக மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு மோதி ஏற்பட்ட விபத்து, தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து இன்று காலை ஆறு மணிக்கு கருமலை எஸ்டேட். வழியாக அரசு பேருந்து ஒன்று கோவைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து கவர்க்கல், ஊமாண்டி முடக்கு என்ற இடம் அருகே வந்த போது, அதிகப்படியான பனிமூட்டம் மற்றும் மழையால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை இருந்துள்ளது.



அப்போது, பொள்ளாச்சி பகுதியில் இருந்து வால்பறைக்கு நிலக்கரி ஏற்றி வந்த லாரி, அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அரசு பேருந்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக பயணிகள் லேசான காயத்துடன் தப்பினர்.



விபத்து குறித்து தகவல் அறிந்த வாட்டர்பால் பகுதி போலீசார் விரைந்து வந்து விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...