பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல்..!

பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட குழந்தைகள் மகப்பேறு நலப்ரிவு கட்டிடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாததால் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த யூனிஸ் என்பவரது மனைவி திவ்யபாரதிக்கு, கடந்த புதன்கிழமை அன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த நான்கே நாட்கள் ஆன பெண் குழந்தையை, இன்று அதிகாலை வேளையில் அடையாளம் தெரியாத யாரோ கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட குழந்தைகள் மகப்பேறு நலப்ரிவு கட்டிடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாததால் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மருத்துவமனை எதிரில் செயல்பட்டு வரும் வணிக வளாகங்களில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். பச்சிளம் குழந்தை பணத்திற்காக செய்வதற்காக கடத்தப்பட்டதா..? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா..? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மூன்று துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைத்து காணாமல் போன குழந்தையை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...