கோவையில் சிறுதுளி அமைப்பும்‌ ரோட்டரி மெட்ரோபோலிஸ்‌ கிளப்பும்‌ இணைந்து 'ரோட்டரி மெட்ரோபோலிஸ்‌ மழை வனம்‌' என்ற பெயரில்‌ மரம்‌ நடு விழா..!

இந்த திட்டத்திற்குத்‌ தேவைப்படும்‌ நிதியுதவியை ரோட்டரி மெட்ரோ போலிஸ்‌ நிறுவனம்‌ வழங்குகிறது. இந்த மரம்‌ நடு விழாவில்‌ 'மியவாக்கி முறையில்‌ சுமார்‌ 21-வகையான 1100-பாரம்பரிய நாட்டு மரங்கள்‌ நடும்‌ திட்டம்‌ துவக்கி வைக்கப்பட்டது.


கோவை: கோவையில் சிறுதுளி அமைப்பும்‌ ரோட்டரி மெட்ரோபோலிஸ்‌ கிளப்பும்‌ இணைந்து 'ரோட்டரி மெட்ரோபோலிஸ்‌ மழை வனம்‌' என்ற பெயரில்‌ மரம்‌ நடு விழாவினைத்‌ துவக்கி வைத்தனர்‌.

கோவை மாவட்டம்‌ தொண்டாமுத்தூர்‌ ஒன்றியத்திற்குட்பட்ட தீத்திபாளையம்‌ ஊராட்சியில்‌ 01.07.2022-அன்று மாலையில்‌ சிறுதுளி அமைப்பும்‌ ரோட்டரி மெட்ரோபோலிஸ்‌ கிளப்பும்‌ இணைந்து 'ரோட்டரி மெட்ரோபோலிஸ்‌ மழை வனம்‌' என்ற பெயரில்‌ மரம்‌ நடு விழாவினைத்‌ துவக்கி வைத்தனர்‌.



இந்தத்‌ திட்டத்திற்குத்‌ தேவைப்படும்‌ நிதியுதவியை ரோட்டரி மெட்ரோ போலிஸ்‌ நிறுவனம்‌ வழங்குகிறது. இந்த மரம்‌ நடு விழாவில்‌ 'மியவாக்கி முறையில்‌ சுமார்‌ 21 வகையான 1100 பாரம்பரிய நாட்டு மரங்கள்‌ நடும்‌ திட்டம்‌ துவக்கி வைக்கப்பட்டது.



இந்த இனிய நிகழ்வில்‌, தமிழ்நாடு விவசாயப்‌ பல்கலைக்கழகத்‌ துணைவேந்தர்‌ DR.V. கீதா லக்ஷ்மியும்‌, டெல்லி இந்திய வானொலி ஆய்வு மைய முன்னாள்‌ இயக்குனர்‌லக்ஷமணன்‌ சிங்‌ ரத்தூர்‌சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்‌.



ரோட்டரி மெட்ரோ போலிஸ்‌ கிளப்பின்‌ தலைவர்‌ சாந்தி சுரேஷ்‌‌, சிறுதுளி அமைப்பின்‌ நிர்வாக அறங்காவலர்‌ வனிதா மோகன்‌ வழிகாட்டுதலின்படி உயர்‌ மட்டக்குழுவின்‌ உறுப்பினர்கள்‌ மற்றும்‌ சிறுதுளியின்‌ பணியாளர்களும்‌ இவ்விழாவில்‌ கலந்து கொண்டனர்‌.

தீத்திபாளையம்‌ பஞ்சாயத்து தலைவர்‌ கந்தசாமி மற்றும்‌ வார்டு கவுன்சிலர்‌ ஜெகனும்‌ இந்த மரம்‌ நடு விழாவில்‌ கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்‌.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...